இடைத்தேர்தலிலும் தொடரும் வெற்றி – காங்கிரசு மகிழ்ச்சி பாஜக அதிர்ச்சி

ஜூலை பத்தாம் தேதி நாடு முழுவதும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி உட்பட பல மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலை சந்தித்தன.

அதேபோன்று, பிகாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு,இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா,ஹமிர்பூர், நலகார்க், உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூரு, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அவற்றின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

அவற்ரின் முடிவுகள்…

பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொகிந்தர் பாகத் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தின் நான்கு தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

உத்தராகண்டின் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் காங்கிரசு வெற்றி பெற்றுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி ஒரு தொகுதியிலும் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன.

பீகாரின் ருபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர்சிங் வெற்றி.

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி.

ஆக மொத்தம் 13 தொகுதிகளில் 11 தொகுதிகளை இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியா கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரசுக் கட்சியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடரும் தோல்வியால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response