18 ஆவது மக்களவைத் தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக இருக்கிறது.அதற்குக் காரணமாக அமைந்த சில மாநிலங்கள்….
மத்தியபிரதேசத்தில் 29 தொகுதிகளை வென்ற பாஜக டெல்லியில் 7 தொகுதிகளையும் 3 ஆவது முறையாக வசப்படுத்தியது. குஜராத்தில் 26 தொகுதிகளில் பாஜக 25, காங்கிரசு 1 தொகுதியை வென்றன. பீகாரில் 40 தொகுதிகளில் பாஜக 12, நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 12, ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி 5, மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 1 தொகுதியில் வென்றன. காங்கிரஸ் 3, ஆர்ஜேடி 4, மார்க்சிஸ்ட் 2 இடங்களைக் கைப்பற்றின.
ஆந்திராவில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு நல்ல பலன் கிடைத்தது. 25 தொகுதிகளில் அங்கு தெலுங்கு தேசம் 16, பாஜக 3, ஜனசேனா 2 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களில் வென்றுள்ளது.
கர்நாடகாவில் கடந்த முறை 25 இல் 17 இடங்களைப் பிடித்த பாஜக இம்முறையும் 17 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரசு 9 இடங்களில் வென்றது.
உத்தரகாண்ட்டில் 5, இமாச்சலபிரதேசத்தில் 4,ஜார்கண்ட்டில் 9,சத்தீச்கர் 10,ஒடிசாவில் 19 ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதால் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற பெயரைப் பெற்றுள்ளது.