ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார் சந்திரபாபு நாயுடு – முடிவு விவரங்கள்

ஆந்திராவில் மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சி தனித்தும், தெலுங்குதேசம், ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரசு-கம்யூனிஸ்ட் தனி அணியாகவும் போட்டியிட்டன. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கும். வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் நேற்று 33 இடங்களில் 401 மையங்களில் நடந்தது.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்து தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வந்தது. தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றது.பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றியது.

ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சி 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட ஜெகனின் கட்சியால் பெற முடியாது.சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக பவன்கல்யாண் தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல் ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 16 இல் தெலுங்கு தேசம், ஜனசேனா 2, பாஜக 3, ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Response