18 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18 ஆவது மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடந்தது. இதில், குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதுதவிர ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும், 25 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. இவற்றில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்தது.

இதில் பாஜக கூட்டணி பெற்ற இடங்கள்….

பாஜக – 240
தெலுங்கு தேசம் – 16
ஐக்கிய ஜனதா தளம் – 12
சிவசேனா (ஷிண்டே) – 7
லோக் ஜனசக்தி – 5
ஆர்எல்டி – 2
ஜேஎஸ்பி – 2
ஜேடிஎஸ் – 2
என்சிபி – 1
எச்ஏஎம் (எஸ்) – 1
ஏடிஏஎல் – 1
ஏஜிபி – 1
யுபிபிஎல் – 1
ஏஜெஎஸ்யுபி – 1

இந்தியா கூட்டணி பெற்ற இடங்கள்…

காங்கிரசு – 99
சமாஜ்வாடி – 38
திரிணாமுல் – 29
திமுக – 22
சிவசேனா (உத்தவ்)- 10
என்சிபி – 7
ஆர்ஜேடி – 4
மார்க்சிஸ்ட் – 4
ஜேஎம்எம் – 3
ஐயுஎம்எல் – 3
ஆம் ஆத்மி – 3
விசிக – 2
சிபிஐ – 1
சிபிஐ (எம்எல்) (எல்) – 2
என்சி – 2
எம்டிஎம்கே – 1
ஆர்எஸ்பி – 1
கேசி – 1
ஆர்எல்டிபி – 1
பிஏடிவிபி – 1

இதன் மூலம் 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 290 இடங்களைக் கைப்பற்றியது.ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக வுக்கு 240 தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. இதனால், இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு 3 ஆவது முறையாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

கடந்த 2 மக்களவைத் தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அசுர பலத்துடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைத்துள்ளன. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Response