
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர்மாற்றம் செய்ய வேண்டும், உரிமைப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீதான தொழில் உரிமையைப் பறிக்கக்கூடாது, இடைநீக்கத்தைத் திரும்பப் பெறவேண்டும், உயர்நீதி மன்றத்தில் உள்ள நடுவண் தொழிலகப் பாதுகாப்புப் படையைத் திரும்பப் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
04.02.2016 மாலை 03.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் கி.த. பச்சையப்பன் தலைமையேற்றார். காஞ்சிஅமுதன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன், தமிழ்த் தேச மார்க்க்சியக் கட்சி அமைப்பாளர் இராசேந்திரசோழன், தமிழ்த் தேச மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிழ்நேயன், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயளார் பொழிலன், தென்மொழி இயக்கம் மா. பூங்குன்றன், உலகத்தமிழ்க் கழகம் பொதுச்செயலாளர் அன்புவாணன், மே 17 இயக்கம் ஒருக்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கல்லூரி ஆசிரியர் சங்க மேனாள் தலைவர் பேராசியர் ப.சிவக்குமார், உயர்நீதிமன்றத்தில் தமிழ் – போராட்டக்குழு வழக்கறிஞர் பகத்சிங், தமிழகத் தமிழாசிரியர்க் கழகம் துணைத்தலைவர் முனைவர் கங்காதரன், தமிழ்வழிக் கல்வி இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அ. சி. சின்னப்பாத் தமிழர், தமிழ்த் தேச குடியரசு இயக்கம் செந்தமிழ்வாணன், அம்பேத்கர் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வழக்குரைஞர் சந்தோசு, தமிழர் விடுதலைக் கழகத் தலைவர் சுந்தரமூர்த்தி, மூத்த வழக்குரைஞர் இரா. சங்கர சுப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினர்.
ஓவியர் வீரசந்தனம், பேரசிரியர் கல்விமணி, பேரசிரியர் கோச்சடை, பேரசிரியர் சங்கரலிங்கம், தமிழ்த்தேச நடுவம் வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்குரைஞர் புகழேந்தி, உலகமுதன் மொழி ஆசிரியர் பா. இறையெழிலன் , மறைமலை அடிகள் மன்றத் தலைவர் இறையழகன், தமிழகத் தமிழாசிரியர் கழகத் துணைத் தலைவர் முனைவர் கங்காதரன், அம்பேத்கர் சிறுத்தைகள் தெய்வமணி, குமுகத் தொழிலாளர் விடுதலை இயக்கத் தலைவர் சேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு பொருளாளர் புலவர் இரத்தினவேலன் நன்றி கூறினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


