பாஜக தோல்வி உறுதி – ஒன்றிய உளவுத்துறை தகவல்

18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாக நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்று ஒன்றிய உளவுத்துறை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்விவரம்…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் டெல்லி, பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும்.

குஜராத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட ஆம் ஆத்மி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. இப்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் குஜராத்தில் தோல்விமுகத்தில் பாஜக உள்ளது.

ஒடிசாவில் ஆளும் கட்சி பாஜக கூட்டணியை வேண்டாம் என்று கூறிவிட்டது.

பஞ்சாப்பிலும் அகாலிதளம் கூட்டணிக்கு வர மறுத்து விட்டது.

வடகிழக்கு மாநிலங்களில் முற்றிலும் பாஜக புறக்கணிக்கப்பட்டு, 3 மாநிலங்களில் போட்டி போட முடியாத நிலை உருவாகியுள்ளது.

தென் மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள 134 தொகுதிகளில் 10 இடங்கள் கூட வாங்க முடியாதநிலை.

மகராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளையே உடைத்துள்ளதால்,அக்கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி இந்தியா கூட்டணியில் இணைந்து விட்டது. அங்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த முறை பெற்ற இடங்களை விட பாதிதான் வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

பாஜக பெரிதும் நம்பும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே பெரும் சரிவைச் சந்திக்கும்.

இதனால் நாடு முழுவதும் அதிகபட்சமாக 200 முதல் 220 இடங்கள்தாம் கிடைக்கும்.

இவ்வாறு ஒன்றிய உளவுத்துறை கணிப்பில் தெரியவந்துள்ளதாம்.

இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்து தேர்தல் பரப்புரைத் திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றதாம்.அதன்படியே தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Leave a Response