சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக மீனவர் ராஜா என்பவர் உயிரிழந்தார்.
கர்நாடக வனத்துறையால், வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் நான்கு பேர் நடமாடியதைப் பார்த்த கர்நாடக வனத்துறையினர், நால்வரையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, ஆற்றுக்குள் விழுந்துள்ளார்.
மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். ஊர் திரும்பியவர்கள் ராஜாவை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்ட சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்தால் அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் ராஜா உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேநேரம், கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடுமையான கண்டனங்களையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அம்மக்கள் சமாதானம் ஆகவில்லை.கர்நாடகத்திடமிருந்து நட்ட ஈடு பெறவேண்டும், சுட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையைக் கையிலெடுத்துள்ளது பாமக.
கர்நடகா வனத்துறையினரால் துப்பாக்கியால் சுட்டு படுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர் ராஜாவின் மரணத்துக்குக் காரணமான கர்நடகா வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் இனிமேலும் இந்த மாதிரி கொடுமையான தாக்குதல் நடக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சிததலைவரிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் மற்றும் மாவட்ட சேர்மன் ராஜசேகர் அவர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர் வி.இ.ராஜேந்திரன் நகரச் செயலாளர் மதியழகன் ஜி.கே.எம்.உதவியாளர் மகேந்திரன் வேல்முருகன் காவேரிபுரம் தலைவர் கே.தங்கவேலு கலந்து கொண்டனர்.
தமிழரின் உயிரை எடுத்த கர்நாடகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு கர்நாடகா இழப்பீடு தரவேண்டும் இல்லையெனில் கர்நாடக எல்லைப்பகுதிகள் அமைதியிழக்கும் என எச்சரித்துள்ளனர். இதனால் அ்ங்கு பதட்டம் அதிகரித்துள்ளது.