ஜூன் 23 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கலகலத்துப் போனது. அதன்பின், அதிமுகவில் இப்போது நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்துள்ளது.
ஆனால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றைத் தன்னிஷ்டத்துக்கு மாற்றிவிட இயலாது என ஓபிஎஸ் தரப்பு சொல்கிறது.
இந்நிலையில், ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முன்பாக, இந்தப் பொதுக்குழுவில் எப்படியாவது தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிடவேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்த எடப்பாடி பழனிச்சாமி, அதற்காக ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரகசியதூது அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
எடப்பாடி சார்பில் ஓபிஎஸ்ஸை சந்தித்தவர், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடியை ஆக்குங்கள், அதன்பின் கட்சியில் உங்களுக்கு எந்தப்பதவி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அதற்காக, ஆயிரம் கோடியா? இரண்டாயிரம் கோடியா? என நீங்கள் எவ்வளவு கேட்டாலும் தருவதற்கு எடப்பாடி தயாராக இருக்கிறார் என்று பேசினாராம்.
அதனால், கடுங்கோபமடைந்த ஓபிஎஸ் உடனே சம்பந்தப்பட்டவரை வெளியேறச் சொல்லிவிட்டதாகத் தகவல்.
அதனாலேயே பொதுக்குழுக் கூட்டத்தின் போது ஓபிஎஸ்ஸை திட்டமிட்டு அவமானப்படுத்தி அடித்து வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது.