இராகுல் வெளியிட்ட வரைபடங்கள் – இந்தியாவின் நிலை இவ்வளவு மோசமா? மக்கள் அதிர்ச்சி

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரசுத் தலைவர் இராகுல் கூறியுள்ளார்.

இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரங்கள் ஆகியவற்றின் 6 வரைபடங்களை இராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒப்பீடு செய்துள்ளார்.

இந்த 3 விசயத்திலும், இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து 2020 ஆம் ஆண்டில் உச்சம் அடைந்திருப்பதை முதலாவது வரைபடம் காட்டுகிறது.

இரு நாட்டிலும் எரிபொருள் விலை 2017 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை உயர்ந்துள்ளதை 2 ஆவது வரைபடம் காட்டுகிறது.

2020-21 ஆம் ஆண்டில் இரு நாடுகளிலும், மதவன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை 3 ஆவது வரைபடம் காட்டுகிறது.

மக்களைத் திசை திருப்புவதால் உண்மைகள் மாறாது. இலங்கையின் நிலைதான் இந்தியாவில் உள்ளது என்று இராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இராகுல் சொல்லியிருக்கும் உண்மையறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response