எரிவாயு உருளை விலை மேலும் உயர்வு – மோடி திருந்தவே மாட்டாரா? மக்கள் கேள்வி

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையை மே 7 ஆம் தேதியன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை மூன்று ரூபாய் ஐம்பது காசுகள் அதிகரித்துள்ளது.அதன்படி விலை ஆயிரத்து பதினெட்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ 8 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்விலை உயர்வு காரணமாக மோடி ஆட்சி மீது மக்கள் கடும்கோபத்தில் உள்ளனர்.அவர் திருந்தவே மாட்டாரா? இப்படித்தான் அடித்தட்டு மக்கள் வாழக்கையில் விளையாடுவாரா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Response