தமிழகம் முழுவதும் சொத்துவரி கடும் உயர்வு – அரசு அறிவிப்பு முழுவிவரம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தில் சொத்து வரியில்‌ பல ஆண்டுகளாக எந்த உயர்வும்‌ இல்லாததால்‌ உள்ளாட்‌சி அமைப்புகளின்‌ மொத்த வருவாயில்‌ சொந்த வருவாயின்‌ பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்‌ செலவீனம்‌ பலமடங்கு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம்‌ என பரிந்துரைக்கப்பட்ட குழுவின்‌ அறிக்கையானது அரசால்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 விழுக்காடு மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 விழுக்காடு மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1201 முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 விழுக்காடு மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.

தற்போது உள்ள சொத்து வரியில்‌, வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 100 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலையப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 75 விழுக்காடும் உயர்த்தப்படுகிறது.

அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌, சொத்து மதிப்பு உயர்வு 2022-23ஆம்‌ நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது. சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின்‌ அறிக்கையின்படி, சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதியில்‌ 600 சதுர அடிக்குக் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 விழுக்காடும், சென்னையோடு 2011 இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்‌சிகளில்‌ 25 விழுக்காடு உயர்த்திடவும்‌.

மேலும்‌, சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதிகளில்‌ உள்ள 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 விழுக்காடு, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு, 1801 சதுர அடிக்கு மேல்‌ பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 விழுக்காடு உயர்த்தவும்‌, சென்னையோடு 2011 இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌, 600-1200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 விழுக்காடு, 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 75 விழுக்காடு, 1801 சதுர அடிக்கு மேல்‌ பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 100 விழுக்காடு உயர்த்தவும்‌ பரிந்துரைந்துள்ளது.

சென்னையின்‌ பிரதான நகரப்‌ பகுதிகளில்‌ வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 150 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய கட்டடங்களுக்கு 10௦ விழுக்காடும், சென்னையோடு 2011 இல்‌ இணைக்கப்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ இதர மாநகராட்சிகளில்‌ உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு, தொழில்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களுக்கு 75 விழுக்காடு சொத்து வரியினை உயர்த்தவும்‌ குழு பரிந்துரைத்துள்ளது.

மேற்படி மாநகராட்சிகளின்‌ சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின்‌ பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, அதனைச் செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சியின்‌ மாமன்றம்‌ மூலம்‌ நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின்‌ போது, குடியிருப்புகளின்‌ பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படவில்லை. ஆனால்‌ தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள்‌ அதிகம்‌ பாதிக்கப்படாத வகையில்‌

குடியிருப்புகளின்‌ பரப்பளவை 4 வகைகளாகப் பிரித்து நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்கள்‌, பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ பிரதான பகுதியில்‌ 6240 விழுக்காடு ஆகவும்‌, பெருநகர சென்னை மாநகராட்‌சியின்‌ பிற பகுதிகள்‌, மாநிலத்தின்‌ பிற 20 மாநகராட்‌சிகள்‌, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்‌சிகளில்‌ 88 விழுக்காடும்‌ அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள்‌ 1200 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவுள்ள வீடுகளில்‌ வசிப்பாதல்‌ இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

எனவே, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளைப்‌ பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது.

மாநகராட்சிகளைப்‌ பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின்‌ தீர்மானம்‌ பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response