ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 21 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.