பாஜகவின் கலாச்சார பிரிவு செயலாளர் பதவி பெற்ற திரைப்பட இசையமைப்பாளர்

தமிழ்த் திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் குமார் நாராயணன்.இவர், திரைப்படங்களுக்கு
இசையமைப்பதோடு தனி இசைத் தொகுப்புகள் மூலமும் புகழ்பெற்று வருகிறார்.

‘எதிர்மறை’ படத்திற்குப் பின்னணி இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் குமார் நாராயணன், கொரோனா ஊரடங்கின் போது,
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பாடல் ஒன்றை எழுதி இசையமைத்து வெளியிட்டார்.

”பத்திரம்…” என்று தொடங்கும்
அந்தப்பாடல், கொரோனா ஆபத்து பற்றியும், மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்பது பற்றியும் விவரிக்கும் விதமாக எழுதப்பட்டிருந்தது.

மக்களிடம் மட்டும் இன்றி சமூக ஆர்வலர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அப்பாடல் மூலம்
இசையமைப்பாளர் குமார் நாராயணன் பெரிதும் பாராட்டு பெற்றார்.

கொரோனா பாடலைத் தொடர்ந்து, ”கம்…கம்…முருகா…” என்ற பக்திப்பாடலை வெளியிட்டார்.

ஆன்மீகவாதிகளையும், துயரத்தில் இருக்கும்
மக்களையும் புத்துணர்ச்சியடையச் செய்யும் விதத்தில் இருந்த முருகக் கடவுள் பாடல், இசையமைப்பாளர் குமார் நாராயணனை, அரசியல்
உலகிலும் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது.

ஆம், திரைப்படம் மற்றும் இசை ஆல்பங்கள் மூலம் பிரபலமடைந்து வரும் இசையமைப்பாளர் குமார் நாராயணன், பாரதிய ஜனதா
கட்சியில் இணைந்து தீவிர அரசியல் பணியாற்றத் தொடங்கினார்.

இந்த நிலையில், மத்திய சென்னை கிழக்குப் பகுதி பா.ஜ.க – வின் கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் பதவி இசையமைப்பாளர்
குமார் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியில் இணைந்ததில் இருந்து தனது தீவிர அரசியல் பணிகளால் மத்திய சென்னை கிழக்குப்பகுதி மக்களை மட்டும் இன்றி பா.ஜ.க-வின் தமிழக தலைமையைக் கவர்ந்து வரும் இசையமைப்பாளர் குமார் நாராயணன், தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி இன்னும் அதிகமாக
உழைக்கக் கூடிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்.

Leave a Response