ஓபிஎஸ் இபிஎஸ் சந்திப்பில் நடந்ததென்ன? – அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்

ஜூன் 4 ஆம் தேதி, சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்டச் செயலாளர்களுடன், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அதற்கடுத்த நாள் சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திப்பு நடந்தது.

அச்சந்திப்பு, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவிக்க நடந்த சந்திப்பு என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டது.

ஆனால், உண்மையில் ்அங்கு நடந்தது பதவிச்சண்டை தான் என்று பத்திரிகையாளர் பிரியாகுருநாதன் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில்….

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்தே தீர வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டதால், நேற்று ரேடிசன் புளு ஹோட்டலில் சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது கொறடாவாக எஸ்.பி வேலுமணி அல்லது பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவரில் ஒருவரை அமர்த்த அனுமதி வேண்டும் என்றும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பி.எஸ் இருக்கலாம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியுள்ளார்.

அதற்கு கொறடாவாக மனோஜ் பாண்டியன் நியமிக்கப்பட வேண்டும் என்று ஓ.பி.எஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பில் சசிகலா ஆடியோ பற்றி இருவரும் பேசவில்லை. கடைசி வரை முடிவு எட்டப்படாத காரணத்தால், 20 நிமிடத்தில் சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தன் முடிவை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்வரவில்லை எனில், கிருஷ்ணா தெருவுவில் இருந்து அபிபுல்லா சாலைக்கு செல்லவும் ஓ.பி.எஸ் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response