மோடி மதுரை வருகை – முன்னறிவிப்பின்றி சுங்கக்கட்டணம் உயர்வு மக்கள் அதிர்ச்சி

சுங்கச்சாவடிகளில் நேரடியாகப் பணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தபோது வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருந்தபோதும் மத்திய அரசு பாஸ்டேக் முறையை அமல்படுத்தியது.

பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துத் துறைக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மதுரை – கப்பலூர், விருதுநகர் – சாத்தூர், திருநெல்வேலி – கயத்தாறு, நாகர்கோவில் – நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச் சாவடிகளில் ரூபாய் 5 ரூபாய் முதல் 30 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் படி, கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூபாய் 80 ஐ விட அதிகமாகவும் , கனரக வாகனம் மற்றும் பேருந்திற்கு ரூபாய் 270 ல் இருந்து 290 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும், மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு ரூபாய் 295 ல் இருந்து 315 ஆகவும், மூன்று முதல் ஆறு அச்சு கொண்ட கனரக வானங்களுக்கு ரூபாய் 425ல் இருந்து 450 ஆகவும், ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூபாய் 520ல் இருந்து 550 ரூபாயாக கட்டணம் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கும் வேலையில், சுங்கக் கட்டண விலையும் உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளைக் கோபமடையச் செய்துள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி ம்துரை வந்திருக்கும் நேரத்தில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response