காஞ்சீபுரம் சங்கரமடத்துக்கு நேற்று சென்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற அவர் காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது….
அ.தி.மு.க. ஆட்சியை ஒழித்துவிட வேண்டும் என்று அதிகம் எண்ணியவர் டிடிவி.தினகரன். தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து கட்சிக் கொடியையும், சின்னத்தையும் வேட்பாளர்களையும் அறிவித்த போது, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆசி வழங்கிவிட்டு, இப்போது சசிகலா அ.தி.மு.க.வுக்கு உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயேந்திர சரஸ்வதியுடனான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு கூறியிருப்பதால் இது சங்கர மடத்தின் கருத்து என்று சொல்கிறார்கள்.
சசிகலா,டிடிவி.தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து வலிமை மிக்க அதிமுகவை உருவாக்கவேண்டும் என்று சிலர் முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் காஞ்சி சங்கர மடம் இதற்கு எதிரிப்பு தெரிவிக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.