நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக இன்று அறிவித்துள்ளார். அதோடு, கட்சிப் பெயரைச் சொல்லுமுன்பே கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த அர்ஜுனமூர்த்தி கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றும் பாரதிய சனதாக் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் என்றும் சொல்லப்பட்டது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினி அறிவித்த ஒரு மணி நேரத்தில் பாசகவின் தமிழக தலைமை அலுவலகப் பொறுப்பாளர் கரு.நாகராஜன் வெளீயிட்ட செய்திக்குறிப்பில்….
தமிழக பாரதிய சனதாக் கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் திரு.அர்ஜுனமூர்த்தி அவர்களுடைய ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலுமிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்.
மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.