
தேசிய விருது பெற்ற ‘பசங்க’ படத்தை இயக்கிய, பாண்டிராஜ். தற்போது பசங்க 2 என்ற பெயரில் இன்னொரு குழந்தைகள் படத்தை எடுக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராக இருக்கிறது.
இந்தப்படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் சொன்னதாவது…
‘பசங்க’ போல், இதுவும் குழந்தைகள் படம். ‘ஹைக்கூ’ தலைப்பு பொருத்தமாக இருந்ததால் அதை வைத்தேன். இப்போது பசங்க 2 என்று மாற்றிவிட்டோம். இந்தப்படத்தின் கதைக்கும், ‘பசங்க’ படக்கதைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இதில் சூர்யா, கார்த்திக், அமலாபால், பிந்துமாதவி ஆகியோர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சிறுவனும், சிறுமியும்தான் கதாநாயகன்- கதாநாயகியாக நடிக்கின்றனர்.
இந்தப்படத்த்தின் கதையைக் கேட்டதும் தாமே படத்தைத் தயாரிக்க முன்வந்ததோடு படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார் சூர்யா.
பசங்க படம் போலவே இந்தப்படமும் எல்லாத்தரப்பினரிடமும் வரவேற்பைப் பெறும் என்பது நிச்சயம்.
இந்த மாதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அக்டோபர் 17 ஆம் தேதி நடக்க உள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வரும்”.
இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.


