ஜெர்மனி மகிழுந்து (கார்)நிறுவன மோசடியை அம்பலப்படுத்திய தமிழர்

ஜெர்மனியின் புகழ்பெற்ற மகிழுந்து( கார் )தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தனது உந்துகளில் மாசுகட்டுப்பாடு மோசடியில் ஈடுபட்டதை சென்னையை சேர்ந்த பேராசிரியர் அம்பலப்படுத்தியது தெரியவந்துள்ளது.

சென்னையை சேர்ந்தவர், அரவிந்த் திருவேங்கடம். இவர் அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழக  பேராசிரியராக உள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக 2013ம் ஆண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டார். சக பேராசிரியர் மார்க் பெஸ்க்கையும் உடன் அழைத்து சென்றார். பயணத்தின்போது ஃபோக்ஸ்வேகன் காரில் வெளியேறும் புகையில், காற்றை மாசுப்படுத்தும் மோனோநைட்ரஜன் ஆக்சைட் இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிறுவனம் விளம்பரத்தில் கூறியதுபோன்று இல்லாமல், காரில் இருந்து வெளியேறும் மாசு அளவு ஐரோப்பிய தர நிர்ணயத்தை விட 20 மடங்கு அதிகம் இருந்தது.

எனவே சோதனைக்காக ஜெட்டா மாடல் மகிழுந்துகளை சோதனை செய்தபோது அவற்றிலும் மாசு அளவு 15 முதல் 35 மடங்கு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மகிழுந்துகளில் இந்த மோசடி இல்லை.

ஃபோக்ஸ்வேகனின் இந்த தில்லுமுல்லுவை அரவிந்த் திருவேங்கடம் ஆதாரத்துடன் வெளியிட்டார். ஃபோக்ஸ்வேகன் கார் வெளியிடும் புகையில் காரீயத்தின் அளவை குறைத்து காட்டுவதற்கென தனி சாப்ட்வேரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே தயாரித்துள்ளதுஅம்பலமானதை தொடர்ந்து அதன் சிஇஓ ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. ஃபோக்ஸ்வேகனுக்கு 1.17 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response