சர்ச்சையில் சிக்கிய விஜயகாந்த் மைத்துனர் – படத்தை நீக்கினார்

நாளேடொன்றில் விஐயகாந்தை அவர் மனைவி ஏலம் விடுவது போல கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்கள்.

அதற்கு எதிர்வினை என்று சொல்லி விஜயகாந்தின் காலில் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விழுவது போன்றொரு கேலிச் சித்திரத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ்.

இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதன் விளைவாக அந்த கேலிச் சித்திரத்தை நீக்கிவிட்டு அதுகுறித்து அவர் எழுதியுள்ள விளக்கம்……

கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.

அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.*

அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்.

இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

Leave a Response