பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 25 பேர் கொண்ட சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் மூவர் ஈழத்தமிழர்கள் மூவர் தமிழ்நாட்டு தமிழர்கள்.
ஈழத்தமிழர்கள்
திலீப் பாலசுப்பிரமணியம்
சுவேந்திரன் சந்திரகுமாரன்
அலிஸ்டின் ஜோன்மாரி
தமிழ்நாட்டுத்தமிழர்கள்
தயாநிதி பெனுய்ட்
மஹதீர் அப்துல்ரகுமான்
முகமட் முகைதீன்
இச்செய்தி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதோடு,மிகவும் மகிழ்வான செய்தி வாழ்த்துகள் சகோதரர்களே,வாழ்த்துகள் பிரான்ஸ்
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..
என்று ஏராளமானோர் பகிர்ந்து வருகிறார்கள்.