தினமும் வெளியிடும் கொரோனா எண்ணிக்கையை உடனே நிறுத்துங்கள் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஜூலை 1 அன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழகத்தில் நேற்று மட்டும் 32,456 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4343 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் வசித்தவர்கள் 4270 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 73 பேர்.

அதிகபட்சமாக சென்னையில் 2,027 பேர், மதுரையில் 273, செங்கல்பட்டில் 171, தி.மலையில் 170, திருவள்ளூரில் 164, கள்ளக்குறிச்சியில் 139, வேலூரில் 138, ராணிப்பேட்டையில் 127, ராமநாதபுரத்தில் 117, காஞ்சிபுரத்தில் 112, திண்டுக்கலில் 94, சேலத்தில் 88, விருதுநகரில் 76, தேனியில் 65, சிவகங்கை 63 பேர் உட்பட 4343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவைர பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2551 பேர் ஆண்கள். 1792 பேர் பெண்கள். தற்போது வரை 60,395 ஆண்கள், 37,975 பேர் பெண்கள், 22 திருநங்கைகள். நேற்று மட்டும் 3095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 41,047 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று மட்டும் தனியார் மருத்துவமனையில் 20 பேர், அரசு மருத்துவமனையில் 37 பேர் என 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 35 பேர். திருவள்ளூர் 5 பேர், மதுரை 4 பேர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், காஞ்சிபுரம், சிவகங்கை தலா 2 பேர், விழுப்புரம், தேனி, தஞ்சை, நெல்லை, தென்காசி தலா ஒருவர் என்று ெமாத்தம் 57 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 12 பேர் எந்தவித இணை நோய்களும் இல்லாமல் கொரோனாவால் இறந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1321 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா சிக்கல் தொடங்கியதிலிருந்து நாள் தோறும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். தினமும் இவ்வாறு அறிக்கை வெளியிடுவதால் வெகுமக்கள் பீதி அடைவதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. அரசாங்கம் பலவித நடவடிக்கைகள் எடுத்தாலும் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது.இதைப்பார்க்கும்போது இந்த அரசால் நம்மைக் காப்பாற்ற இயலாது என்றே மக்கள் நினைக்கின்றனர்.

இவ்வாறு அவநம்பிக்கையையும் பீதியையும் ஏற்படுத்தும் ஸ்கோர் போர்டை உடனே நிறுத்துங்கள் என்று பலரும் கூறிவருகிறார்கள்.

Leave a Response