நவம்பர் வரை இலவச ரேசன் என்றார் மோடி அது என்ன ஆச்சு? – தமிழக மக்கள் கேள்வி

ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பேசும்போது, பிரதம மந்திரி ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதாவது இந்தத் திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை தொடரும் என்றார்.

தமிழகத்தில் ஏப்ரல்,மே,ஜூன் ஆகிய மாதங்களில் இலவசமாக வழங்கப்பட்டன ரேசன் பொருட்கள்.ஆனால் இம்மாதம் இலவசம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

ஜூலை 1 ஆ தேதி முதல் தமிழக நியாயவிலைக் கடைகளில் பருப்பு எண்ணெய்,சர்க்கரை ஆகிய பொருட்களை விலை கொடுத்து வாங்கவேண்டும் என்று சொல்லி அவ்வாறே விநியோகித்தும் வருகின்றனர்.

இதனால் பிரதமரின் அறிவிப்பு தமிழகத்துக்குப் பொருந்தாதா? அல்லது மக்களிடையே பேசிய பிரதமர், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட மறந்துவிட்டாரா? என்கிற கேள்விகள் தமிழகமெங்கும் கேட்கின்றன. பதில் சொல்ல ஆளில்லை.

Leave a Response