தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது…..
தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படஉள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில் மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்று இருக்கும். இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே நேரில் சென்று சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 5.98 கோடி வயதானவர்கள் உள்ளனர். அவர்களில் 4.48 கோடி பேர் கடந்த ஓராண்டில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33 இலட்சம் பேர் உயர் இரத்த அழுத்தம், 23.1 இலட்சம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 16.8 இலட்சம் பேருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இரண்டும் இருக்கிறது. சென்னையில் இதுவரை 17 இலட்சம் பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 1.9 இலட்சம் பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும் 1.5 பேர் சர்க்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அனைவருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மருந்துப் பெட்டகங்கள் வழங்கி வருகிறார்கள். இதுவரை 83 இலட்சம் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.