ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு 729 புதுப்பிக்கப்பட்ட வீடுகள் – முதலமைச்சர் வழங்கினார்

தமிழ்நாட்டின் பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம்​களில் ரூ.38.76 கோடி​யில் கட்டப்பட்ட 729 வீடு​கள், ரூ.54.80 கோடி​யில் கட்​டப்​பட்ட வரு​வாய்த் துறை கட்​டிடங்​களை முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுதொடர்​பாக, தமிழ்நாடு அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது….

முகாம்​களில் வசிக்​கும் இலங்கைத் தமிழர்​களுக்குப் பாது​காப்​பான, கவுர​வ​மான, மேம்​படுத்​தப்​பட்ட வாழ்க்கை உறுதி செய்​யப்​படும். இலங்கை அகதி​கள் முகாம் என்​பது இலங்கைத் தமிழர் மறு​வாழ்வு முகாம் என்று பெயர் மாற்​றம் செய்​யப்​படு​கிறது என்​பது உட்பட பல்​வேறு அறி​விப்​பு​களை சட்​டப்​பேர​வை​யில் 110 ஆவது விதி​யின்​கீழ் முதலமச்சர் மு.க.ஸ்டா​லின் வெளி​யிட்​டார்.

அதன் ஒரு பகு​தி​யாக, 26 மாவட்​டங்​களில் உள்ள 67 முகாம்​களில் பழுதடைந்த 7,469 வீடு​களுக்குப் பதிலாக புதிய வீடு​கள் கட்ட ஆணை வழங்​கப்​பட்​டு, புதிய வீடு​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. இதில் ஏற்​கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்​களில் கட்டி முடிக்​கப்​பட்ட 2,781 புதிய வீடு​கள் பயனாளி​களிடம்
ஒப்​படைக்​கப்​பட்​டன.

இதன் தொடர்ச்​சி​யாக, பொது மற்​றும் மறு​வாழ்வுத் துறை சார்​பில் விழுப்​புரம் மாவட்​டம் கீழ்​புத்​துப்​பட்​டு, திருப்​பூர் – திரு​மூர்த்தி நகர், சேலம் தம்​மம்​பட்​டி, தரு​மபுரி – நாகாவதி அணை, கேசர்​குளி அணை,
விருதுநகர் – கண்​டி​யாபுரம் ஆகிய இடங்​களில் உள்ள மறு​வாழ்வு முகாம்​களில் ரூ.38.76 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 729 வீடு​களை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் இருந்து காணொலி வாயி​லாக முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

அதோடு, தரு​மபுரி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வலக வளாகத்​தில் 4.25 ஏக்​கர் பரப்​பில் தரை மற்​றும் 5 தளங்​களு​டன் ரூ.36.62 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள மாவட்ட ஆட்​சி​யர் அலு​வலக கூடு​தல் கட்​டிடம், திண்​டுக்​கல் (மேற்​கு), மதுரை மாவட்​டம் மேலூர், தரு​மபுரி – பென்​னாகரம், தூத்​துக்​குடி – ஒட்​டப்​பி​டாரம் ஆகிய இடங்​களில் ரூ.17.52 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 4 வட்​டாட்​சி​யர் அலுவலகக் கட்​டிடங்​கள், கன்​னி​யாகுமரி மாவட்​டம் தக்​கலை, கடலூர் மாவட்​டம் பண்​ருட்​டி​யில் ரூ.65.76 இலட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள 2 வரு​வாய் ஆய்​வாளர் அலு​வல​கத்​துடன் கூடிய குடி​யிருப்​பு​கள் என மொத்​தம் ரூ.54.80 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள வரு​வாய்த் துறை கட்​டிடங்​களை​யும் முதலமைச்சர் காணொலி வாயி​லாகத் திறந்து வைத்​தார்.

இந்த நிகழ்​வு​களில் அமைச்​சர்​கள் சாத்​தூர் இராமச்​சந்​திரன், சா.​மு.​நாசர், தலை​மைச்செயலர் முரு​கானந்​தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்​கர், சிறப்புச்செயலர் சஜ்ஜன்​சிங் ரா.ச​வான், வரு​வாய்த்துறை செயலர் அமு​தா, வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் சாய்​கு​மார், சமூகப் பாது​காப்புத் திட்ட இயக்​குநர் கே.​வி.​முரளிதரன், அயலகத் தமிழர் நலன், மறு​வாழ்வுத் துறை ஆணை​யர் வள்​ளலார் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Leave a Response