சிற்றிதழ்களைக் காக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில்….

கடந்த இரண்டு மாத காலமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை அரசின் கவனத்திற்கும் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் இவ்வூடகங்களின் உரிமையாளர்கள் கொண்டு வந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரும் நிறுவனங்களினால் நடத்தப்படும் இத்தகைய ஊடகங்களே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் போது சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய வளர்ச்சிக்காக சிற்றிதழ்கள் ஆற்றி வரும் தொண்டு அளப்பரியதாகும். ஆனால் மத்திய – மாநில அரசுகளின் சார்பில் அளிக்கப்படும் விளம்பரங்கள் எதுவும் சிற்றிதழ்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அரசு நூலகங்களுக்கும் இவை வாங்கப்படுவதில்லை.

இலக்கிய வளர்ச்சி ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு சிற்றிதழ்கள் தொடர்ந்து இழப்புகளுக்கு நடுவே நடத்தப்படுகின்றன.

இந்தக் காலக்கட்டத்திலாவது மத்திய – மாநில அரசுகள் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையில் குறைந்த அளவு 40 விழுக்காடாவது சிற்றிதழ்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். அரசு நூலகங்களுக்கும் இவை வாங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response