எச்.ராஜாவுக்கு சுபவீரபாண்டியன் திடீர் நன்றி

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் காரப்பன். இவர் தான் சார்ந்த நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் சில பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை பீளமேட்டில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் ஆகியோர் குறித்து சில விமர்சனங்களை முன் வைத்ததாகச் சொல்லப்படுகிறது..

அது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வந்திருக்கிறது எனக்கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் இந்து அமைப்புகள் மனு கொடுத்துள்ளனவாம்.

அதோடு, இவர் கடையில் துணிகள் யாரும் வாங்க வேண்டாம் எனவும் இந்து அமைப்பினர் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,சிறுமுகை யில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்

என்று எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து #WeWeSupportKarappanSilks என்கிற குறிச்சொல்லை உருவாக்கி அதில் ஏராளமானோர் காரப்பன் கடைக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தன் ட்விட்டர் பதிவில்,

இப்போது சிறுமுகை, காரப்பன் கடையில் விற்பனை கூடியுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. ஆன்லைன் விற்பனையும் தொடக்கத் திட்டம் உள்ளதாம். ஹெச். ராஜா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

என்று கூறியுள்ளார்.

Leave a Response