திருச்சி நாம் தமிழர் மீது கொடூர தாக்குதல் – கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் களமாவூர் அருகே
உள்ள வாகன வசூல் செய்யும் சுங்கச்சாவடியில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வினோத் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் இருபது பேருக்கும் மேலான நபர்கள் ஆபாசமாகப் பேசி நாகரிகமற்ற முறையில் வினோத்தையும் வாகனத்தை ஓட்டிவந்த
ஓட்டுநரையும் தாக்கியுள்ளனர்.

வினோத்தைக் குறிவைத்து அந்த 20 நபர்களும் தாக்கியுள்ளனர்.
கடைசியாக முட்புதரில் வீசியுள்ளனர்.
அதில் பலரும் மது போதையில் இருந்துள்ளனர்.

வடநாட்டினரால் நடத்தப்படும் சுங்கச் சாவடிகளில், நியாயம் பேசும்
பயணிகளை குண்டர்களை வைத்துத் தாக்குவது என்பது
சுங்கச் சாவடி ஏலமெடுத்த வடநாட்டு
முதலாளிகளின் தந்திர நடவடிக்கையாக உள்ளது.
இதுபோன்ற தாக்குதல்களை தமிழ்நாட்டில் மட்டும் அரங்கேற்றி வருகின்றனர்.

நல்ல உடற்கட்டு இருந்த காரணத்தால் வினோத் உயிரோடு
இருக்கிறார். உடல் பலகீனமான நபராக இருந்திருந்தால்
மரணம் நிகழ்ந்திருக்கும்.அவருக்கு தலைப்பகுதியைத் தவிர உடல் முழுதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள்.

இத்தாக்குதல் தொடர்பாக மாத்தூர் காவல்நிலையத்தில் புகார்
அளித்துள்ளனர்.அதனால் மூன்று பேரை மட்டும் கைது செய்துள்ளனராம்.

இதனால், கொலைமுயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி அந்தக் குறிப்பிட்ட வாகன வசூல் மையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (அக்டோபர் 22) மதியம் 1 மணியளவில் நடைபெறவுள்ளது.

Leave a Response