திமுக அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்புகள். திமுக கூட்டணிக் கட்சியினரும் அச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோருகின்றனர்.
இது தொடர்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுபவீயும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…,…,,
தொழிலாளர் தொடர்பான அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
அனைத்து வகையிலும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் தொண்டாற்றி வரும் திராவிட மாடல் அரசு, தொழிலாளர்களுக்கான ஒரு புதிய அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரு நாளைக்கு 12 மணி நேரமும், வாரத்திற்கு 48 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்று அந்தச் சட்ட முன் வடிவம் கூறுகிறது.
இன்னொரு பொதுவுடைமை இயக்கமாக எப்போதும் இயங்கி வரும் திராவிட முன்னேற்ற கழகம், தன் ஆட்சியில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்! உழைப்புச் சுரண்டல் என்பதில்தான் இது போய் முடியும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
எனவே உடனடியாக இதனைத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது!
– சுப.வீரபாண்டியன்
பொதுச் செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.