டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகிய மூவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
மராட்டிய சட்டசபை நவம்பர் 9 ஆம் தேதியும், அரியானா சட்டசபை நவம்பர் 2 ஆம் தேதியும் நிறைவடைகிறது அம்மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறியதாவது….
மராட்டியம், அரியானாவில் அடுத்த மாதம் அக்டோபர் 21 ந்தேதி தேர்தல் நடைபெறும். 24 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி – நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேர்தல் நாள்: அக்டோபர் 21 ; வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24.
வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் .30 ஆம் தேதி தொடக்கம்
வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3 ஆம் தேதி கடைசி நாள்
2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் நாள்: அக்டோபர் 21 ; வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24
வேட்பு மனு தாக்கல் செப்.30ஆம் தேதி தொடக்கம்
வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாள்.
மகாராஷ்டிரா, அரியானா ஆகிய இரண்டு மாநில தேர்தல்கள் இந்திய அளவிலும் நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் தேர்தல் தமிழகத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.