வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
அதில், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 08-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
நடக்கவிருக்கிற வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அன்புத்தங்கை தீபலட்சுமி அவர்கள் போட்டியிடுவார்.
கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் உள்ள உறவுகள் அனைவரும் இக்களத்தில் பங்கேற்றுத் தங்களது அளப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி வெற்றிக்கு உழைக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.