முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர் – ஒரு டிவிட்டர் பதிவால் பரபரப்பு

கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜ் நாடார் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்,

எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும் தகுதி இரண்டு பேர் @mafoikprajan @KASengottaiyan

என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் 25 ஆம் தேதி இந்தப்பதிவை அவர் போட்டிருக்கிறார்.

அதற்கு பலர் ஆதரவு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த ட்வீட்டுக்கு 74 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதெல்லாம் ஒரு செய்தியா? என்று கோபம் கொள்ளாதீர்கள்.

இது ஒரு செய்தியே இல்லை, 74 ஆவது நபர் விருப்பம் தெரிவிக்கும் வரை.

ஆம், 74 ஆவது நபராக இந்த ட்வீட்டுக்கு விருப்பம் தெரிவித்திருப்பவர், ராஜ்நாடார் குறிப்பிட்ட இருவரில் ஒருவரான அமைச்சர் பாண்டியராஜன்.

இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால் இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது.

இப்போது ஆளும் அதிமுகவுக்குள் உட்கட்சிப் பூசல் வெகு தீவிரமாக இருக்கிறது என்பதற்கு இந்த ட்வீட் ஒரு சான்று என்கிறார்கள்.

இதனால் முதல்வர் மாற்றம் இருக்குமா? என்கிற பரபரப்பு அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதாம்.

Leave a Response