சூப்பர் ஓவருக்குப் போன போட்டி – நழுவிய வெற்றியைத் தழுவிய டெல்லி

ஐபிஎல் 12 – மார்ச் 30 இரவு எட்டுமணிக்கு நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின.இதில் டாஸ்வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 185 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரசல் 62 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 50 ரன்களையும் எடுத்தனர்.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பிருத்வி ஷா-ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.

அதிரடியாக விளையாடிய பிருத்வி ஷா 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்ததால், ஆட்டம் டையில் முடிந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவரில் ஒரு ஓவர் வீசப்பட்டது.

இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 10 ரன்கள் சேர்த்தது. 11 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற பரபரப்புடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

தொடக்கத்தில் நழுவ விட்ட வெற்றியை சூப்பர் ஓவரில் பிடித்துக்கொண்டது டெல்லி அணி.

Leave a Response