திமுக அல்ல டிடிவி தினகரனை வீழ்த்துவதே முக்கியம் – அதிமுகவின் திட்டம் அம்பலம்

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கவிருக்கிறது. அவற்றில் திருவாரூர் தொகுதியும் ஒன்று.

அத்தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் கட்சி வேட்பாளருக்கு எதிராக அதிமுகவினர் செய்துள்ள வேலை பற்றி அத்தொகுதியைச் சேர்ந்த எம்,செந்தில்குமார் என்பவரது பதிவு இது….

அதிமுக வுக்கு தெளிவா தெரிஞ்சிப் போச்சி. திமுக அளவுக்கு ஓட்டுகளை பெற முடியாது. இரண்டாம் இடம் தான் முக்கியம். அதை டிடிவி கிட்ட பறி கொடுத்துட்டோம்னா இங்க ஆட்சியில் இருப்பதே வேஸ்ட்டு.

ஒரு பயலும் நம்மை மதிக்க மாட்டான்னு தெரிஞ்சிருக்கு. வெளியில் ஜபுரை கைவிடாம திமுக வை எதிர்த்து குரல் கொடுக்குற மாதிரி பாவ்லா காட்னாலும் இவிய்ங்க அன்டர்க்ரவுண்ட் வேலை பாக்குறது டிடிவி குரூப்புக்கு எதிரா தான்.

இவங்களுக்கு முக்கியம் இரண்டாம் இடத்தை தக்க வச்சிக்கனும். அதுக்கு எந்த லெவல்லயும் இறங்க தயாரா இருக்காங்க.

அமமுக வுக்கு குக்கர் சின்னத்தை டகால்டி வேலை பார்த்து கிடைக்க விடாம பண்ணிட்டாங்க. அந்த இடத்தை புடிக்க இன்னொரு திருட்டுத்தனம் பண்ணியிருக்காங்க.

திருவாரூர்ல அமமுக காமராஜை வேட்பாளரா களமிறக்கி இருக்கு. அவருக்கு பரிசுப்பெட்டி சின்னம் கொடுத்துருக்காங்க.

ஆனா அதே தொகுதில காமராஜ்னு இன்னொருத்தர் களமிறக்கி விடப்பட்டு இருக்கார். அவருக்கு சரியாக குக்கர் சின்னம் கொடுத்துருக்காங்க.

இந்த கூத்தெல்லாம் பாக்கும் போது செம சிரிப்பா இருக்கு. இப்ப அமமுக இரண்டாம் இடத்தை குறி வச்சி வேலை செஞ்சாலே போதும். அதிமுக எனும் கட்சி தானா வந்து மடில விழும்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response