6 பந்துகளில் 17 ரன்கள் – சோதனையில் வீழ்ந்த. பெங்களூரு

மார்ச் 28 அன்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி மும்பை அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா, டீ காக் களமிறங்கினர். முதல் போட்டியில் 14 ரன்களில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா இந்தப் ேபாட்டியில் நிதானித்து விளையாடினர்.

அவருடன் டீ காக்கும் பந்துகளை ஒருப்பக்கம் பதம் பார்த்தார். அதனால் 6 ஓவர்கள் முடிவில் மும்பை 52 ரன்களை எட்டியது. ஆனால் 7வது ஒவரை வீசிய யஜ்வேந்திர சாஹல், 23 ரன்கள் எடுத்த டீ காக்கை ேபால்டாக்கினார். அப்போது மும்பை அணியின் ஸ்கோர் 54 ரன்கள்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் நிதானமாக விளையாடினர். மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. அதன் பின்னம் மும்பை அணியின் வேகம் ஜெட் வேகத்தில் சென்றது. 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. ஹர்திக் பாண்டியா ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 14 பந்தில் 32 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் ஒரு சிக்ஸர் விளையாட்டு அரங்கிற்கு வெளியே சென்று விழுந்தது. அப்போது பாண்டியா தன் புஜபலத்தை காட்டி, பெங்களூரு அணியினரை வெறுப்பேற்றினார்.

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பார்திவ் படேல்-மொயீன் அலி ஜோடி சிறப்பான துவக்கம் தனது. எதிர்பாராத விதமாக மொயீன் அலி ரன் அவுட் ஆக, பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி மும்பை அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்டார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த டீவில்லியர்ஸ் முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை யுவராஜ் நழுவ விட்டார். பின்னர் அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்தார்.

ஒரு புறம் டீவில்லியர்ஸ் நிலைத்து நின்று ஆடினாலும் மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசி கட்டத்தில் 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19 ஓவரை வீசிய பும்ரா வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை அனுபவ வீரர் மலிங்கா வீசினார். முதல் பந்தில் துபே சிக்ஸர் விளாசினார். அடுத்த 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதன்மூலம் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Leave a Response