வைகோ திமுக அணியிலிருந்து விலகுகிறாரா? – அரசியலில் பரபரப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்….

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. சீரமைப்புப் பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாகப் பணியாற்றுகின்றனர்.

உயிரைப் பணயம் வைத்து மின்சார ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகிகள், தமிழக அதிகாரிகள் என்பதை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் நற்பெயரை பெற்றுள்ளனர்.

நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். போராட்டம் நடத்துவதற்கு மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடவில்லை.

மாநில அரசு கேட்ட நிவாரண நிதியில் 5 சதவிகிதத்திற்கு மேல் மத்திய அரசு கொடுக்காது. முதல் அமைச்சர் தஞ்சையில் முகாம் அமைத்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறினார்.

வைகோவின் இந்தப்பேட்டியில் தமிழக அரசை மிக அதிகமாகப் பாராட்டியதைத் தொடர்ந்து, வைகோ புது டிராக்கில் போவதைப் போல் தோன்றுகிறது என்று ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துச் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில், ஷமா அப்துல் உலமா சபை சார்பில்ல் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்,

திமுக மதிமுக கூட்டணியில் சிறிதளவும் கீறல்கள் இல்லை. திமுகவுடனான கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் வைகோ அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர் என்பதால் சமூக ஊடகங்களில் சந்தேகம் நீடிக்கிறது.

Leave a Response