
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஜித் வடேகர், உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
1974-ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதன்பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துவந்தார். இவர், இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவால், மும்பை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அஜித் வடேகர்(77), நேற்று காலமானார்.
அவரின் மறைவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
அஜித் வடேகர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். 90-களில் விளையாடிய வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர முக்கியப் பங்காற்றியவர். அவருடைய அறிவுரையிலும் வழிகாட்டுதலிலும் நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இந்த கடினமான நேரத்தில், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், துயரத்தைத் தாங்கிக்கொள்ள இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
எனக் கூறியுள்ளார் சச்சின்.


