நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? – அன்புமணியை அழைக்கும் சிம்பு

நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படம் மாநாடு. அந்தப் பெயரை இன்று காலை அறிவித்தார்கள்.

மாலையில், அந்தப் பெயருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லி நடிகர் சிம்பு ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார்.

அதில் நன்றி தெரிவித்ததோடு நில்லாமல், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு
ஏற்கெனவே ரஜினியின் பாபா, அண்மையில் விஜய்யின் சர்கார் ஆகிய படங்களுக்கு எதிர்ப்பு என தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் அன்புமணிக்கு ஓர் அழைப்பையும் விடுத்திருக்கிறார் சிம்பு.

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார், அவரும் தயாரென்றால் அவருக்கு வசதியான நேரம் மற்றும் இடம் சொன்னால் அவரோடு விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சிம்பு.

நாட்டில் சிகரெட் இருக்கும் வரை சினிமாவிலும் சிகரெட் இருக்கும் என்று காலையில் டி.ராஜேந்தர் கூறியிருந்தார்.

Leave a Response