டிஜிட்டல் இந்தியாவில் முதலிடம் பிடித்த, மோடியே திரும்பிப் போ

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் உருவாக்கப்பட்டுள்ள #GoBackModi (மோடியே திரும்பிப்போ) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதல்இடம்பிடித்ததுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி ஏற்றி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கறுப்புச் சட்டை அல்லது கறுப்பு பட்டை அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில்
முதல் இடம்பிடித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா என்று முழங்கும் மோடி இப்போதாவது தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வாரா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Response