சத்யம் திரையரங்க மேலாளர் முனிகன்னையா மீது மணிரத்னம் கோபம்.

மணிரத்னம் படமென்றால் அது நகரம் சார்ந்த மக்களுக்கான படமாக இருக்கும் என்பது வெள்ளிடைமலை. ஆனால் சென்னையின் புகழ்பெற்ற சய்தம்திரையரங்கவளாகத்தின் மேலாளருக்கு அது தெரி£யமல் போய்விட்டதெனச் சொல்கிறார்கள். வருகிற ஏப்ரல் 17 அன்று மணிரத்னம் இயக்கிய ஓகாதல்கண்மணி படம் வெளியாகவிருக்கிறது. அதேநாளில் ராகவாலாரன்ஸ் நடித்த காஞ்சனா2 படமும் வெளியாகவிருகிறது. இவ்விரண்டில் சென்னைப் பெருநகர மக்கள் விரும்பிப்பார்க்கும் படமாக ஓகாதல்கண்மணிதான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் அந்தப்படத்துக்கு சத்யம் வளாகத்திலுள்ள பெரிய திரையரங்கமான சத்யம் அரங்கைத் தராமல் சின்னஅரங்கமான சாந்தம் அரங்கைக் கொடுத்திருக்கிறாராம் அதன் மேலாளர் முனிகன்னையா. இது தொடர்பாக மணிரத்னம் தரப்பிலிருந்து அவரை அணுகியபோதும் பலமணி நேரம் காக்கவைத்ததோடு இல்லை தரமுடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். இதனால் மணிரத்னம் முனிகன்னையா மீது கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இணையதளத்தில் நுழைவுச்சீட்டைப் பதிவு செய்யத் தொடங்கிய ஓரிரு மணிநேரங்களிலிலேயே ஓகாதல்கண்மணி படத்தின் சீட்டுகள் பதிவாகிவிட்டன என்றும் காஞ்சான2 படத்துக்£ன சீட்டுகள் பதிவாகாமல் இருந்தன என்றும் சொல்கிறார்கள்.
திரையரங்கமேலாளர் என்பவர் அந்த அரங்கத்துக்கு அதிகவருமானத்தைத் தேடுகிறவராக இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால் அவரோ அதற்கு நேர்மாறாக இருக்கிறார். இது திரையரங்கவளாக முதலாளிக்குத் தெரியுமா? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

1 Comment

  1. Why do worry? If movie is good it will make cash registers ringing to makers whether it is screened at big Sathyam screen or small screen. If movie is going to be hit one Sathyam big screen will not change its fortune or if it is going to be a flop Sathyam big screen alone can not alter its status of being flop or save the movie. Have confidence about the quality of the product, automatically audience will accept big.

Leave a Response