வாக்குச்சீட்டு முறை வந்தால் பாஜக காணாமல் போகும்

உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில், கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளை பாஜக்விடமிருந்து கைப்பற்றியது சமாஜ்வாதிக்கட்சி.

வெற்றி பெற்ற போதும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இல்லாமல் இருந்திருந்தால் உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

உ.பி.யில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு இல்லாமல் இருந்திருந்தால் சமாஜ்வாதிவேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.

பல இயந்திரங்களில் வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பே ஓட்டு பதியப்பட்டுள்ளது. பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

வாக்குச் சீட்டு முறை இருந்தால் மக்கள் இன்னும் தங்கள் கோபத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response