
தமிழில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் கௌதம் மேனன் அவ்வப்போது அவர் படத்திலே எதாவது ஒரு சின்ன கேரக்டரில் தனது நடிப்பு ஆசையை நிறைவேற்றுக் கொள்வார். இந்நிலையில் முதல் முதலாக ‘நாம்’ என்ற மலையாள படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அதன் இசைவெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார் கௌதம் மேனன்.
அடுத்ததாக இளம் நடிகர் பகத் பாசில் நடிப்பில் ‘ட்ரான்ஸ்’ என்ற படத்தில் கௌதம் மேனன் நடிக்கவுள்ளாராம். இதற்கு முன்பாக இந்த கேரக்டருக்கு ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் நடிக்கவேண்டியதாம். ஆனால் சில காரணத்தால் தற்போது கௌதம் மேனன நடிக்கிறார்
