அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் கவிஞர்கண்ணதாசன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் ஜெயகாந்தன் பேச்சின் இரு பகுதி கீழே உள்ளது. அதைத் தொடர்ந்து இப்போது ஜெயகாந்தன் இறந்தபிறகு அவர் குறித்து தமிழ் ஆர்வலர் ஹரிஹரன் எழுதியுள்ள கருத்து ஆகிய இரண்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.
பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை–த.ஜெயகாந்தன்.
——————————————————————
இது ஒரு சின்ன விடீயோ பதிவு. ஆனால் இதன் பின்னால் ஏகப்பட்ட அரசியல் உண்டு.. ஆம் இங்கே சிலர் ஜெயகாந்தனை தூக்கி கொண்டாடுகிறார்கள் செத்துவிட்டான் என்று.. என் இனத்தின் 1,50,000 பேர் சாகவும் இவன் தான் காரணம் என்று அறியாமல்.. இந்த விடீயோவை பார்த்துவிட்டு தூக்கி சுமந்து திரியுங்கள்.
ஆம் இந்தியா ஒரு இனப்படுகொலையை நடத்திக் காட்டியது இந்திய அமைதிப்படை என்ற பெயரில். அதற்காக தமிழ்நாட்டில் வேலை பார்த்தவர்கள் ஏகப்பட்ட பேர். எம்.ஜி.ஆர் பிரபாகரன் சொல்வதையே ஏற்றுக்கொள்வேன் என்ற சொன்ன பிறகும் கூட இந்த ஒப்பந்தம் நிறைவேறியது.. அப்படி நிறைவேற சிலர் பிரசாரம் செய்தார்கள்.
அவர்கள் யார் யார் என்றால் ம.பொ.சி, சோ. மற்றும் ஜெயகாந்தன்… இவர்களால் வியாபாரம் செய்யப்பட்ட ஒப்பந்தம் தான் 2009ல் நடந்த இனப்படுகொலைக்கு முன்னுதாரணமாக நின்று பத்திரிக்கைகளை ஒழித்து சர்வதேச மனித உரிமைகளின் கண்களினை மூடி இந்தியா அமைதிப்படை என்ற பெயரினால் ஒரு இனப்படுகொலையை நடத்தியது… அதே முறையை பின்பற்றி சிங்களவன் 2009ல் முடித்தான் இந்தியாவின் உதவியுடன்..
ஆனால் இன்று இனப்படுகொலைக்கு உதவியாக நின்ற ஜெயகாந்தன் கூட பெருந்தமிழர் ஆகிவிட்டார்.. வாழ்க இவர்களின் தமிழினப் பற்று..
செத்த பிறகு ஒருவனின் தெருப்பொறுக்கித்தனத்தை பேசக் கூடாது என்பது தான் தமிழன் அடையாளம் அதற்காக என் எதிரி எங்கெல்லாம் இருந்தான் என்று சொல்லாமல் இருக்க முடியாது.. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்றால் ஜெயகாந்தன் போன்றவர்கள் செத்தும் கெடுத்தான் என்று தான் சொல்ல முடியும்.
