விஷால் விட்டுக்கொடுத்தும் ஜீவாவுக்கு பயனில்லாமல் போய்விட்டதே..!


ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கீ’.. நாடோடிகள் என்கிற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்த, அதேசமயம் சிம்புவை வைத்து படம் தயாரித்து நட்டமடைந்த மைக்கேல் ராயப்பன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப்படத்தின் விழாவில் கலந்துகொண்ட விஷால் இந்த கீ’ படத்திற்கு போட்டியாக தான் நிற்க விரும்பவில்லை என்றும், அதனால் தனது இரும்புக்குதிரை’ பட ரிலீஸை வேறு தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஆனால் அதேசமயம் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படத்திலும் ஜீவா நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம், தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது இந்தப்படமும் பிப்-9ஆம் தேதியே ரிலீஸாக உள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆக ஜீவாவுக்கு போட்டியாக அவரது இன்னொரு படமே களத்தில் குதித்துள்ளதை என்னவென்று சொல்வது..?

Leave a Response