வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேட்டி சட்டை அணிந்து தமிழர்களோடு பொங்கல் கொண்டாடியுள்ளார். ஜனவரி மாதத்தை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார்.

கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து கீழே:

”வணக்கம். இன்று (14.01.18) கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் நான்கு நாள் நடக்கும் அறுவடை பண்டிகையின் தொடக்கமாக தைப் பொங்கல் கொண்டாடுகிறார்கள். தை பொங்கல் அறுவடை பரிசுகளுக்கு நன்றி கூற வேண்டிய தருணம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டாட கிடைக்கும் ஒரு வாய்ப்பு பொங்கல் திருநாள். கனடா தமிழர்களின் வலுவான வேர்களை பிரதிபலிக்க ஜனவரியை நாங்கள் தமிழ் பாரம்பர்ய மாதமாக கொண்டாடுகிறோம்.

கனடா தமிழர்கள் நமது நாட்டிற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். கனடாவை திறந்த மனதோடு, அனைவருக்குமான வலுவான நாடாக மாற்ற கனடா மக்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள்.

2018-இல் நாம் இணைந்து முன்னோக்கிச் செல்லும்போது நம்மை ஒன்றினைக்கும் மதிப்புமிக்க விஷயங்களை தொடர்ந்து கொண்டாடி, கனடாவை சிறந்த மற்றும் அனைவருக்கும் இணக்கமான நாடாக உருவாக்க தினமும் உழைப்போம்.

எனது குடும்பம் சார்பாக நானும் சோஃபியும் தைப் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம். இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்.” என்றார்

Leave a Response