
கடந்த வருடம் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்தப்படத்தின் இயக்குநர் நெல்சன் கூறிய கதை ஒன்று நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடித்துவிடவே, அதில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஜோக்கர்’, ‘மாநகரம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ உள்ளிட்ட வித்தியாசமான களங்களைக் கொண்ட படங்களை தயாரிக்கும் நிறுவனம் ட்ரீன் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான். இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
தற்போது இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், விரைவில் இறுதி செய்யப்பட்ட படக்குழுவினரையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்


