
ஜே.பி.மூவீஸ் சார்பில்
“பேய் எல்லாம் பாவங்க”
பேய்கள் என்றால் பயமுறுத்தும் அதுதான் பேய் பற்றி எடுக்கும் சினிமாக்களின் ஃபார்முலா. இந்த எல்லை கோட்டினை அழித்து புது ட்ரெண்டில் ஒரு பேய்ப்படம் “பேய் எல்லாம் பாவங்க”. முழுக்க முழுக்க ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் ஒரு பாதியாகவும், வெளிப்புற படப்பிடிப்பு ஒரு பகுதியாகவும் நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் பேய்ப்படம் என்கிறார் இயக்குனர் தீபக் நாராயணன். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் தவமணி பாலகிருஷ்ணன்.
வல்லதேசம், ஐவர் படங்களின் நாயகன் அரசு கதாநாயகனாகவும், கேரளத்து புதுவரவு டோனாசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அப்புகுட்டி, ஸ்ரீஜித் ரவி, சிவகுமார், செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோட்டூர், கொல்லங்கோடு, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இந்த படத்தின் இயக்குனர் மலையாள தேசத்தில் முன்னனி விளம்பர இயக்குனர். இவர் பிரியதர்ஷன், அடூர் கோபாலகிருஷ்ணன் முன்னணி இயக்குனர்களின் உதவியாளர் ஆவர்.
ஒளிப்பதிவு- பிரசாந்த்
இசை – நவீன் சங்கர்
எடிட்டிங் – அருண் தாமஸ்
கதை, திரைக்கதை, வசனம் – தவமணி பாலகிருஷ்ணன்
இயக்கம் – தீபக் நாராயணன்.
ஜே.பி மூவிஸ் சார்பாக அப்துல் ஜீனஸ் தயாரித்திருக்கிறார்.


