கோபி நயினார் கதையை அழுத்தமாக நம்பிய நயன்தாரா..!


கோபி நயினார் டைரக்சனில் நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படம் வரும் நவ-1௦ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் கதையின் நாயகியாக கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் வெளியானபின் தமிழகத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்த போவது உறுதி.

இந்தப்படத்தின் கதையை கேட்க ஆரம்பித்த அடுத்த ஐந்தாவது நிமிடமே நயன்தாரா இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அன்றிலிருந்து படப்பிடிப்பு முடிந்து, இதோ இப்போது படம் ரிலீசாகும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்.

சமூகத்திற்கு இன்று தேவைப்படும் செய்தி ஒன்றை தைரியமாக சொல்வதற்கு இந்தநிமிடம் வரை நயன்தாரா எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்” என நயன்தாராவின் அர்ப்பணிப்பு உணர்வு பற்றி சிலாகித்து பேசினார் இயக்குனர் கோபி நயினார்.

Leave a Response