எச்.ராஜா தோல்வி – தேசபக்தாளின் தோல்வியை தேசமே கொண்டாடுகிறது

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

எச்.ராஜாவின் தோல்வியை எல்லாத் தரப்பினரும் மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளமெங்கும் இது பற்றி ஏராளமான பதிவுகள். அவற்றில் ஒரு சில இங்கே….

சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் -நெல்லைகண்ணன்

அடுத்தவர் தோல்வியில் மகிழ்வது நம் இயல்பில்லை.ஆனாலும் இம்முறை மன்னித்து விடுங்கள். இன்று என்னால் மகிழாமல் இருக்க முடியவில்லை -சுபவீ

சாரணர் இயக்கத் தேர்தலில் எச்.ராஜா தோல்வி, போ போய் புள்ளகுட்டிங்கள படிக்கவை – மனுஷ்யபுத்திரன்

தோல்விதான் வெற்றிக்கு முதல்படி…மனச தளரவிடாம முயற்சித்தா இன்னும் 300″ வருசத்துல தமிழ்நாட்ல ஆச்சிய அமுக்கிரலாம்..வாழ்த்துக்கள் ராஜா சார் – வடிவேல்

286க்கு வெறும் 52 ஓட்டு வாங்குன H.ராஜா தலைவராகாம போனது முறைகேடுன்னு சொல்லிட்டு போறார்..
அப்ப 1200க்கு 1176 மார்க் வாங்குன அனிதா டாக்டராகாம போனது எவ்வளவு பெரிய முறைகேடு? -பூபதிமுருகேஷ்

சாரணர் தேர்தலில் தேசவிரோதி வெற்றி, தேசபக்தாளின் தோல்வியை தேசமே கொண்டாடுகிறது – வழக்கறிஞர் மு.ஆனந்தன்

சாரண இயக்கம் வெற்றி எச்.ராஜா தோல்வி கலகம்இல்லா தமிழகம் – எஸ்.எஸ்.சிவசங்கர்

எச் ராஜா தோல்வியை தமிழகம் முழுவதும் வெற்றி விழாவாக கொண்டாடுகின்றனர்
தமிழக மக்களிடம் எந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளனர் – மகேந்திரன்

பாரத சாரண சாரணியர்க்கொடி பண்பாய் பறக்கின்றதே…- வழக்கறிஞர் அருள்மொழி

Leave a Response