ஆங்கிலப்படத்தின் சாதனையை முறியடித்தது தமிழ்ப்படம் விவேகம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் டீஸர் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சமூக வலைதளங்களை அஜித் – விஜய் இருவரது படங்களின் டீஸர், ட்ரெய்லர் வெளியாகும் போது யார் சாதனை படைக்கிறார்கள் என்ற போட்டி நிலவும். இதுவரை இவ்விருவரும் மாறி மாறி சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.

இந்நிலையி, சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. இதன் டீஸர் மே 10-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு, பாராட்டைப் பெற்றது.

அந்த டீஸர், தற்போது உலகளவில் அதிக விருப்பங்களைப் பெற்ற டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பாக ‘ஸ்டார்வார்ஸ் – தி லாஸ்ட் ஜெடி’ என்ற ஹாலிவுட் படத்தின் டீஸர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதனை கடந்துள்ளது ‘விவேகம்’ படத்தின் டீஸர்.575218 விருப்பங்களைப் பெற்றுள்ளது.

ஆங்கிலப்படத்தின் சாதனையை ஒரு தமிழ்ப்படம் முறியடித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்ப்பட ரசிகர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Leave a Response